குமராட்சி ஒன்றியம் தெற்கு மாங்குடியில் இருந்து கருப்பூர் வரை சுமார் 3 கி.மீட்டர் தூரம் உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க புதிதாக தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?