ஓசூர் - பெங்களூரு பழைய சாலையில் பிரபல துணிக்கடை எதிரில் இருந்து வாசவி நகர் செல்லும் சாலையில் வங்கிகள், வணிக நிறுவனங்கள் ஓட்டல்கள் மற்றும் பல்வேறு கடைகள் உள்ளன. இங்குள்ள சாலை, குறுகலாகவும், நீண்ட காலமாக குண்டும், குழியுமாகவும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பகுதியில் மக்கள் நடமாட்டமும், இருசக்கர மற்றும் கார், வேன் போன்ற வாகனங்கள் அதிகளவில் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பாக இருந்து வருகிறது. எனவே, மிகவும் மோசமான இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுந்தர், ஓசூர்.