சென்னை நுங்கம்பாக்கம், மேத்தா நகர் நெல்சன் மாணிக்கம் ரோடு மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. பிரபலமான பள்ளிக்கு அருகில் இருக்கும் இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகளும் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீர் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.