முக்கூடல் பேரூராட்சி 10-வது வார்டு கீழ பெரிய வீதி, அம்மன் கோவில் தெரு சந்திப்பு பகுதியில் சாலையில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.