வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-01-21 08:57 GMT

அதங்கோடு பரக்குடிவிளையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலை செல்கிறது. இந்த சாலையில் வாகனங்களில் வேகமாக வரும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் இசக்கியம்மன் கோவிலின் அருகில் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள், மாணவர்கள் நலன்கருதி கோவிலின் அருகில் விபத்தை தடுக்கும் வகையில் சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

சாலை வசதி