கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நகரில் உத்தனப்பள்ளி செல்லும் சாலையிலும், லிட்டில் பிளவர் பள்ளி அருகே பாலத்தின் அடியிலும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் பல முறை விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. எனவே சூளகிரி நகரில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகிலும், உத்தனப்பள்ளி சாலையிலும் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மஞ்சுநாத், சூளகிரி.