சாலை ஆக்கிரமிப்பு

Update: 2024-01-07 17:41 GMT
பழனி அருகே புதுஆயக்குடியில் திண்டுக்கல் சாலையோரம் ஏராளமான கடைகள் உள்ளன. ஆனால் இங்குள்ள கடைக்காரர்கள் பலர் சாலையோரத்தை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக பாதயாத்திரை வரும் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் வாகன விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆயக்குடி சாலையிலும் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது