புழுதி பறக்கும் சாலையால் அவதி

Update: 2023-12-31 18:08 GMT
திண்டிவனம்-மரக்காணம் இடையே இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் வடகோட்டிபாக்கம் பகுதி சாலையில் அதிக அளவில் புழுதி பறக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண்எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே புழுதியை கட்டுப்படுத்த சாலையில் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது