மதுரை மீனாட்சிபுரம்-குலமங்கலம் சாலையில் வேகத்தடை இல்லாததால் ஷேர் ஆட்டோக்கள், மினி பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள் அசுர வேகத்தில் செல்கின்றனர். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் பெரியவர்கள் மிகவும் அச்சத்தில் சாலையை கடக்க வேண்டி உள்ளது. விபத்து ஏற்படும் முன்பு சாலையில் ஆங்காங்கே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?