குண்டும், குழியுமான சாலை

Update: 2023-12-24 13:36 GMT

அரியலூர் நகர்ப்பகுதியில் உள்ள வ.உ.சி. தெரு சாலை மிகவும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த வழியாக பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மழைக்காலங்களில் இந்த வழியாக இருசக்கர வாகனங்களிலோ அல்லது நடந்தோ செல்வது மிகவும் சிரமம் அளிப்பதாக உள்ளது. இதனால் இந்த பகுதியினர் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்