வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

Update: 2023-12-24 13:33 GMT

அரியலூர்-திருச்சி சாலையில் பல்வேறு வீடுகள் மற்றும் பள்ளிகள் உள்ளன. இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக ஆட்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இந்நிலையில், இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் சிலர் மிக வேகமாக செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும், வாகனங்களில் செல்பவர்களுக்கும் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் உயிர் சேதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே வேகத்தடை அமைக்கப்பட்டிருக்கிறது. தகுந்த இடத்தில் மேலும் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்