அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் வாலாஜாநகரம் பகுதியில் உள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் பலருக்கு இரவு நேரங்களிலும், பகல் நேரங்களில் வேகமாக வருபவர்களும் அங்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விடுகின்றனர். இதனால் வாகனங்களில் பழுது மற்றும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.