சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், 3-வது அவென்யூவில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அருகில் பள்ளிக்கு இருப்பதால், வாகன ஓட்டிகள் மற்றுமு் சைக்கிளில் செல்லும் மாணவகள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு விரைந்து சாலையை சீர்செய்ய வேண்டும்.