நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2023-12-17 12:20 GMT

சென்னை அமைந்தகரை, 8-வது வார்டு மஞ்சக்கொல்லை தெருவில் சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றது. அதன் பணிகள் முடிந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சாலை சீரமைக்காகமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், சிறிது மழை பெய்தாலே அந்த பகுதியில் சேறும் சகதியுமாக மாறுகிறது. எனவே, அந்த பகுதிகளில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்