அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர்-திருமானூர் சாலையில் உள்ள பல்வேறு வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் தங்களது வாகனங்களை விடுகின்றனர். இதனால் வாகனங்கள் எளிதில் பழுதடைந்துவிடுகிறது. மேலும் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளின் மீது வெள்ளை வர்ணம் பூசுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.