அரியலூர் வண்ணாங்குட்டை மெயின்ரோடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழை நேரங்களில் இந்த சாலை வழியாக நடந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இதில் மழை பெய்யும் சமயங்களில் சாலைகளில் பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் கீழே விழும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.