விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் உள்ள பாத்திமா நகர் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி தவறி கீழே விழும் நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் அந்த சாலை வழியாக நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இது தவிர குடியிருப்புகளுக்கு இடையே வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீரும் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?