அறச்சலூர்-வடுகபட்டி சாலையில் உள்ள வெங்கமேடுவில் சீரமைப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டு கடந்த 2 மாதங்களாக மூடப்படாமல் கிடக்கிறது. மேலும் அந்த இடத்தின் இருபுறமும் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு தான் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் பஸ் ஏற நிற்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே ரோட்டை விரைந்து சீரமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.