தஞ்சை நவநீதகிருஷ்ண தெரு நடராஜபுரம் மூன்றாவது பிரிவு பகுதியில் உள்ள சாலை நடுவே பள்ளம் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த பள்ளத்தில் மட்டும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?