சென்னை ராயபுரம், பென்சில் பேட்டரி ரெயில்வே கேட் அருகிலுள்ள கண்ணன் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த பகுதியாக செல்பவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும், அதே பகுதியில் மதுபான கடை இருப்பதால் அங்கு வருபவர்கள் பாட்டிலையும், பிளாஸ்டிக் கிளாசையும் சாலையில் வீசி செல்கின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.