விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கே.புதூரில் இருந்து முனியாண்டி கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுவதால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைப்பார்களா?