திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லும் சாலை மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. மழைகாலத்தில் அலுவலகத்திற்கு வருபவர்கள் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பள்ளம் தெரியாமல் கீழே விழுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.