தார்ச்சாலை வேண்டும்

Update: 2023-11-26 10:22 GMT

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை பகுதி இனாத்துக்கான்பட்டியில் முறையான சாலை வசதி இல்லை.இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்