செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் ரெயில் நிலையம் செல்லும் பயணிகள் பள்ளத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.