அரியலூர் ரெயில்வே மேம்பாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கவில்லை. இதனால் குண்டும், குழியுமாகவும், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரெயில் நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செல்ல வேண்டுமானால் இந்த பாலத்தின் கீழேதான் ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் குண்டும், குழியுமாக உள்ளதால் மழைக்காலத்தில் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேம்.