குண்டும், குழியுமான தார் சாலை

Update: 2023-11-19 12:37 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தேனூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பல ஆண்டுகள் ஆனதையொட்டி தற்போது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்