தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை சுல்தானிய முதல் தெருவில் சாலை உள்ளது. இந்த சாலையில் குடிநீர் குழாய் திட்டத்துக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டன. ஆனால் பணி முடிந்த பின்னர் பள்ளங்கள் முறையாக மூடப்படவில்லை. இதனால் சாலை குண்டும்,குழியுமாக மாறியதாக கூறப்படுகிறது. தற்போது மழைநீர் தேங்கி சாலை முழுவதும் சேறும்,சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.