தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் கிராமத்தில் உள்ள செல்லம்பட்டிக்கு செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. வேன், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரும்போது எதிரே வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒதுங்கி செல்வதற்கு கூட முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கனரக வாகனங்கள் வரும்போது அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.