அந்தியூர்-சத்தி சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் சாலையில் 2 வாகனங்கள் ஒதுங்கும் அளவுக்கு மட்டுமே வழி உள்ளது. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் முந்தி செல்ல வழி இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக செல்கின்றன. இதன் காரணமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் விபத்துகளை சந்தித்து வருகின்றன. இதை தடுக்க அந்தியூரில் இருந்து முனியப்பம்பாளையம் வரையுள்ள சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?