சென்னை, அடையாறு காமராஜ் அவென்யூ 2-வது சாலை மற்றும் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. அருகில் பள்ளி இருப்பதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, உடனடியாக புதிய சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.