அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், குண்டவெளி கிராமம் கன்னியம்மன் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை மிகவும் குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியுமாகவும் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவிலையாம். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.