குண்டும், குழியுமான சாலை

Update: 2023-11-05 11:40 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள துளார் கிராமத்தில் இருந்து மணக்குடையான் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் தற்போது பெய்யும் மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்