தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே நாட்டார்பட்டியில் இருந்து பூவனூர் வழியாக திரவியநகர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழைக்காலத்தில் சாலையில் குளம் போன்று தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.