ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் இருந்து நசியனூர் செல்லும் சாலையில் உள்ள செம்மாம்பாளையம் பிரிவு வரை போடப்பட்டுள்ள தார்சாலையின் ஒருபுறம் மிகவும் மோசமாக உள்ளது. மேடு, பள்ளமாக காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான வாகனங்கள் ஒதுங்கி சென்று வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?