சென்னை, திருவான்மியூர் மாநகர பஸ் நிறுத்தத்தின் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பஸ் ஏறவரும் பள்ளி மாணவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் ,முதியவர், அனைவரும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், பஸ் நிலையம் முழுவதும் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. சிறிய மழை பெய்தாலும் மழைநீர் பள்ளங்களில் தேங்கி விடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.