சென்னை மாதவரம் காவல் நிலையத்திற்குட்பட்ட இரட்டை ஏரி அருகில் உள்ள சாலையில் நடுப்புறத்தில் பள்ளம் விழுந்து அபாயகரமான முறையில் உள்ளது. பரபரப்பான இந்த சாலையில் வாகனங்கள் அதிகம் செல்லும் இடத்தில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?