அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தானில் இருந்து அரங்கோட்டை வழியாக கோவிந்தபுத்தூர் வரை செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.