கடையம் யூனியன் திருமலையப்பபுரத்தில் இருந்து கோவிந்தபேரி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலை முழுவதும் ராட்சத பள்ளங்களாக உள்ளன. இதனால் மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.