கிருஷ்ணகிரி மாவட்டம் கும்பளம்- சூளகிரி செல்லும் வழியில் பெத்தசிகரலப்பள்ளி ஊராட்சி அலுவலகம் செல்லும் சாலை சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறதுஃ இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் 1 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.