திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீழக்குன்னுப்பட்டி கின்னேரியில் உள்ள கோட்டத்தூர் மெயின் ரோட்டில் இருந்து அய்யனார் கோவில் வரை சாலை மண் சாலையாக காணப்படுகிறது. இந்த சாலையானது மழைபெய்யும்போது சேறும், சகதியுமாக காணப்படுவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை தார்சாலையாக மாற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.