பெரம்பலூர் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவின் சுற்றுச்சுவர் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் ரவுண்டானாவின் உள் பகுதி பராமரிப்பு இன்றி மரங்கள் முளைத்து காணப்படுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ரவுண்டானாவை பராமரித்து அழகுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.