அரியலூர் மாவட்டம் அரியலூர்-ஜெயங்கொண்டம் முதன்மை சாலையில் சின்ன நாகலூர் பாதைக்கு கிழக்கு புறத்தில் பாலக்கரை மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் அதிக அளவில் சிமெண்டு ஆலைகளுக்கு எண்ணற்ற கனரக வாகனங்கள் மற்றும் கூலி வேலைக்கு பொதுமக்கள் இருசக்கர சக்கர வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர் . இந்த பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. சில நாட்களாக பாலத்தின் தரை தளத்தில் ஆங்காங்கே கான்கிரீட் கலவைகள் பெயர்ந்து மிகப்பெரிய ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய சில வாரங்களுக்கு முன்னர் தார் பேரல் மற்றும் ஜல்லிகற்கள் கொண்டு வரப்பட்டு ஓரங்கட்டி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.