விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் தனியார் பள்ளியின் எதிரே அமைந்துள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.