சாலை சீரமைக்கப்படுமா?
ஏற்றக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட வெட்டுக்குழியில் இருந்து ஆனையடி பட்டணம் கால்வாய் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைப்பார்களா?.
-பிரதீப் தர்மராஜ், ஏற்றக்கோடு.