நடுவீரப்பட்டு அருகே சென்னப்பநாயக்கன்பாளையம் மேலண்ட வீதியில் ஆக்கிரமிப்பு காரணமாக சாலை சுருங்கிப்போய் விட்டது. இதனால் அந்த வழியாக 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கி்ரமிப்புகளை அகற்றி சாலையை மீட்டுத்தர வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.