விபத்து ஏற்படுத்தும் வேகத்தடைகள்

Update: 2023-10-01 11:27 GMT

அரியலூர் முதல் ஜெயங்கொண்டம் செல்லும் முதன்மை சாலையில் வாலாஜாநகரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், வி.கைகட்டி ஆகிய ஊர்களில் சுமார் 15 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் வெள்ளி வர்ணம் பூசப்படாமலும், ஒளிரும் பிரதி பலிப்பான்கள் பொருத்தப்படாமல் உள்ளதாலும் அடிக்கடி இரவு நேரத்தில் விபத்து ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்