மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் இருந்து ஆற்றங்கரை செல்லும் சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. குண்டும்,குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகளும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.