சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-24 11:19 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பஸ் நிலையத்தில் இருந்து தருமபுரம் செல்லும் சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர். சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் அவர்கள் மிகுந்த சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

சாலை பழுது