தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே உள்ள பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்கப்பட்டது. இதில் உள்ள சிமென்டு சிலாப்புகள் பெயர்ந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தடை யாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நடைபாதையில் உள்ள தடையை நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் பட்டுக்கோட்டை