காட்பாடி காங்கேயநல்லூரில் ராதாகிருஷ்ணன் நகர் 2-வது குறுக்கு தெரு உள்ளது. இந்தத் தெருவில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், சாலையில் பல இடங்களில் குட்டை குட்டையாக மழைநீர் தேங்கி உள்ளது.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுகிறார்கள். 4 மாதமாக மிகவும் மோசமான நிலையில் உள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் மழைநீரை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.